வரிச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கை சுமை அதிகரிப்பு – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!

Thursday, October 25th, 2018

இன்று இந்த நாட்டில் ஒரு பொருளின் உற்பத்தி தொடக்கம் அந்தப் பொருளினை நுகர்கின்ற வரையிலும் ஒவ்வொரு நகர்வுகளுக்கும் என வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இது இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரிதும் பாதித்து வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் எவரும் அவதானம் செலுத்துவதாக இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நிதி, மதுவரி மற்றும் உற்பத்தி வரி சட்டமூலங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பொருட்களுக்கான வரி அறவீடுகள், பொருட்களின் விலையேற்றங்கள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்த நிலை எப்போதாவது மாறி, எமது மக்களுக்கு சுமையற்ற ஒரு வாழ்க்கையினை வாழக்கூடிய சந்தர்ப்பம் கிட்டும் என எமது மக்களால் நம்ப முடியாத அளவிற்கு இன்று இந்த நாட்டின் நிலை மாறிவிட்டுள்ளது.

இன்றுதான் இப்படி, நாளை இந்த நிலை மாறும் என்பதற்கு வெறும் வார்த்தைகளால் சமாளிப்புகளை வழங்குவதைத் தவிர, நாளை இந்த நிலை மாறும் என்பதற்கு உங்களிடமும் எவ்விதமான நடைமுறை சாத்தியமான திட்டங்களும். இல்லை.

இவ்வளவு காலமாக அறவிட்டுக் கொண்டிரு;கின்ற வரிகளைவிட, வேறு எந்தெந்த வழிகளில் வரிகளை அறவிட முடியும் என்பதையே சதா ஆராய்ந்து பார்த்துக் கொண்டு, அதற்கேற்ப வரிகளை அறவிட்டுக் கொள்வதற்கான சட்டமூலங்களைக் கொண்டு வருகின்றீர்கள்.

இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சியானது 175 ரூபாவை எட்டிவிட்டிருக்கின்றது. பெறுமதி குறைந்த காகித நோட்டுக்களை அதிகளவில் அச்சிட்டு, இல்லாததொரு பொருளாதார அபிவிருத்தியைக் காட்டிக் கொண்டு, நாட்டின் அந்நியச் செலாவணியானது தேவையற்ற வகைகளில் வீண்விரயமாக்கப்பட்டதன் – படுவதன் விளைவினையே நாமிந்த ரூபாவின் வீழ்ச்சியில் காண்கின்றோம். இந்த நிலைக்கு ஒப்பான நிலைமையே வடக்கிலும் காணப்படுகின்றது.

Related posts:

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே இந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது – நாட...
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட ஆசிரியர்கள் அ...
சரியான வழிகாட்டியின் பக்கம் மக்களது பார்வை செல்லுமாக இருந்தால் நிச்சயம் அவர்களது அபிலாசைகள் வெற்றி க...