சரியான வழிகாட்டியின் பக்கம் மக்களது பார்வை செல்லுமாக இருந்தால் நிச்சயம் அவர்களது அபிலாசைகள் வெற்றி கொள்ளப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, April 17th, 2024

மக்களின் விருப்பங்களும் அபிலாசைகளுமே நாம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களாக இருந்துவருகின்றது. அதனடிப்படையில் பலவகையான பிரச்சினைகள் பலவகையான தேவைகளுடன் இருக்கின்ற உங்களது  எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவு செய்யப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேவைகளுள் உடனடி தேவையான வாழ்வாதாரமே அவற்றுள் முக்கியமானதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் சம்மளங்குளம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காணும் நோக்கிலான மக்கள் குறைகேள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது சுமார் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற சம்மளம்குளம் குளம் கிராமத்தின் அடிப்படை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் தற்போது தான் அதிலிருந்து மீண்டுவந்துகொண்டிருக்கின்றது. இவற்றை மக்களாகிய நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதுமாத்திரமின்றி உங்களது சிந்தனை அல்லது தெரிவுகள் ஒவ்வொன்றும் சரியானதாக இருந்து அதன்பால் பயணிப்பீர்களாக இருந்தால் வாழ்க்கையில் சௌகரியங்களுடன் வாழ முடியும்.

இதைவிடுத்து தவறான சிந்தனையாளர்களின் உசுப்பேற்றல்களுக்குள் சிக்கி பயணிப்பீர்களாக இரந்தால் உங்கள் எதிர்காலமும் கற்பாறைகளில் விதைக்கப்படும் விதைகளாகவெ அமைந்துவிடும். அதனால் பயனேதுதம் கிடைக்காது நல்ல தரையிலேயே விதைகளை விதைக்க வேண்டும்.

அதுபோன்றுதான் உங்களது அரசியல் சிந்தனையும் பார்வையும் இருக்கவேண்டும். அவ்வாறான தூரநோக்குள்ளதும் சுயநலமற்றதுமான சரியான வழிகாட்டியின் பக்கம் உங்களது பார்வை செல்லுமாக இருந்தால் நிச்சயம் உங்கள் அபிலாசைகள் வெற்றி கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

மக்கள் எமக்கு வழங்குகின்ற ஆணையினை எமக்கான பலமாகக் கொண்டு, தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக  மக்களின் எதிர்பார்ப்புகளையும் அரசியல் அபிலாசைகளையும் வென்று கொடுப்பதே எமது வழிமுறையாக இருக்கின்றது.

ஆனாலும் உசுப்போற்றும் அரசியல்வாதிகளின் போலி வாக்குறிதிகளை நம்பி மீண்டும் இருப்பவைகளை இளந்து விடாதீர்கள் என்’றும் அமைச்சர் மக்களுடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: