அனர்த்த முகாமைத்துவ அரச நிதியை நிவாரணமாக வழங்க தீர்மானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, March 23rd, 2020

அனர்த்த முகாமைத்துவத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த அரச நிதியில் இருந்து மாவட்டங்கள் தோறும் ரூபா பத்து இலட்சம் நிதியை நிவாரண பணிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ள நிலையில் ஊரடங்கு வேளைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நாளாந்த வருமானத்தை நம்பி வாழும் மக்கள் நம்பிக்கையோடு இருக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமூர்த்திப் பணியாளிகள் ஒவ்வொருவருக்கும் சமுர்த்தி வங்கியிலிருந்து கடனாக ரூபா பத்தாயிரத்தினை வழங்குவதற்கான பரிந்துரைகளையும் அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கொரொனோ தொற்று நோயை எதிர்கொள்ளும் எமது மக்களின் சகல பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் எடுத்துவரும் சகல நடவடிக்கைகளும் காத்திரமானதாக இருக்கும்.

இது குறித்து நான் மக்களுடன் நேரடியாகவும், அமைச்சின் இணைப்பாளர்கள் ஊடாகவும் மக்களின் தேவைகள் எவையென அறிந்து ஜானாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் அடிக்கடி பேசி வருகிறேன்.

இது போலவே பாதிக்கப்பட்ட மக்களின் உணவு மருந்து மற்றும் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வதற்காக இன்னும் சில அமைச்சரவை பத்திரங்களை நான் சமர்ப்பிற்க எண்ணியுள்ளேன் எனன தெரிவித்திருக்கும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ந்தும் மக்கள் தமது தேவைகளை தம்மிடம் தெரிவிக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts: