யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் ஒரு தொகுதி காணிகள் இராணுவத்தினரால் விடுவிப்பு! ……

Sunday, March 10th, 2024


யாழ் மற்றுன் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.03.2024) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  ஜனாதிபதி செயலணியின் சிரேஸ்ட அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கா, யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சாந்தன விக்ரமசிங்க, ஜனாதிபதியின் வடக்கு மாகாண அபிவிருத்தி செயலணியின் செயளாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் சிவபாலசுந்தரன், கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் நளாயினி, கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன், யாழ் மாவட்ட உதவி அரச அதிபர் ( காணி) ஸ்ரீமோகன், வலி வடக்கு பரதேச செயலர்  மற்றும் காணி உரிமையாளர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவில் சுமார் 70 ஏக்கர் காணி நிலங்ளும், கிளிநொச்சி மாவடத்தில் சுமார் 40 ஏக்கர் காணி நிலங்களும் இன்றையதினம்  பாதுகாப்பு தரப்பினரால் விடுவிக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து  காங்கேசன்துறை மத்தி , தெற்கு – 234, 235 கிராம  அலுவலர் பிரிவுகளில் 20.3 ஏக்கர் காணி நிலங்களும்,

வறுத்தலைவிளான் 241 கிராம அலுவலர் பிரிவில் 23 ஏக்கர் காணி நிலங்களும்,

மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம அலுவலர் பிரிவில் 24 ஏக்கர் காணி நிலங்களும் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த விடுவிக்கப்பட்டுள்ளது

காணிகளின் உரிமங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  ஜனாதிபதி செயலணியின் செரேஸ்ட அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கா ஆகியோர் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன...
தேசிய பாதுகாப்பில் தமிழரது பங்களிப்பும் அவசியம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தீர்வு கிட்டும் - பல்கலைக்கழக நியமனத்தில் உள்ளீர்க்கப்படாத உழியர்களிடம...

ஜனநாயக வழிமுறையின் ஊடாகவே நிரந்தர தீர்வை பெறமுடியும் என்று கூறியவர்கள் நாங்கள் – பூநகரியில் டக்ளஸ் எ...
பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க அ...
வல்வெட்டித்துறை - ஊறணி பிரதேச வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த மருத்துவ சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமை...