பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, February 15th, 2022

கிளிநொச்சியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பனை தென்னை வளக் கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இன்று (15.02.2022) முனவைத்த கோரிக்கைக்கைக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது, தமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான  அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை எனவும்,  அதனால் உற்பத்திகள் வீணாக விரயமாகுவதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக துறைசார் திணைக்களத்துடன் தொடர்புகொண்ட அமைச்சர், விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்காக அனுமதியை ஒரு வாரகாலத்தில் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றவர்களில் ஒரு பகுதியினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீன்பிடிக் குல்லா வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாங்குளத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண நீர்பாசன தினைக்களகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர் வேளாண்மையை ஊக்குவித்து எமது தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் தனது திட்டத்திற்கு வலுச்சேர்க்கும்  வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வு மகிழ்ச்சி அழிப்பதாக தெரிவித்துள்ளதுடன், இவ்வாறான திட்டங்களை பயனாளர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: