மலைய மக்களின் உரிமைக்காகவும் நாம் போராடினோம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Thursday, May 24th, 2018
எமது மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடியிருந்த காலத்தில் மலையக மக்களை ஒருபோதும் மறந்துவிட்டு நாங்கள் செயற்பட்டிருக்கவில்லை. அந்த மக்களில் பல தோழர்கள் எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தனர். எமது போராட்டத்திற்காக உயிர்த் தியாகங்களையும் செய்திருக்கின்றனர். எமது உடன் பிறப்புக்களான மலையக மக்களின் பிரஜா உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க வேண்டுமென நாம் 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 08ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘திம்பு” பேச்சுவார்த்தையின்போது பிரேரணை முன்வைத்திருந்தோம்.
அந்தவகையில் தேயிலை தோட்ட மக்களுக்கு அவர்கள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்தே பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இன்னும் தீரா பிரச்சினையாகவே தொடர்கின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை தேயிலைச் சபை (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


