பனை சார் தொழிலும் எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போவது மிகுந்த வேதனையைளிக்கின்றது – செயலாளர் நாகம் டக்ளஸ் தேவாந்தா! 

Friday, March 23rd, 2018

எமது மக்களின் பிரதான வாழ்வாதாரங்களான மண் மற்றும் கடல் வளங்களால், மக்களுக்கு உரிய வாழ்க்கையினை வழங்க இயலாத நிலையில்; பெரும்பாலானவர்களது வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து உதவும் ஒரு துறையாகவே பனை வளம் காணப்படுகின்றது. தற்போது இத்துறையும எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போகின்ற நிலையும் காணப்படுவது ; மிகுந்த வேதனையைளிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் மதுவரி தொடர்பிலான விஷேட சட்டமூலங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

வட இலங்கையின் சுதேச வளங்களில் ஒன்றாக எமது பண்பாட்டுக் காலத்துடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பனை வளத்தினை நம்பிய நிலையில் நேரடி மற்றும் மறைமுக தொழில் நடவடிக்கைகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

எமது பகுதியினைப் பொறுத்த வரையில் விவசாயம், கடற்றொழில் போன்ற இரு பிரதான தொழிற்துறைகள் தவிர்ந்த நிலையில், பனை சார்ந்த உற்பத்திகளின் மூலமாக தங்களது ஜீவனோபாயத்தினைக் கொண்டு நடாத்துகின்ற மக்களே பெரும்பாலானவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயத் துறையினை எடுத்துக் கொண்டால், தொடரும் காலநிலை மாற்றங்களால் எமது விவசாய மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், காட்டு மிருகங்களின் தொல்லைகளும் எமது மக்களின் விவசாய செய்கைகளை அடிக்கடி பாதிப்படையச் செய்கின்றன.

கடற்றொழிலை எடுத்துக் கொண்டால், இந்திய கடற்றொழிலாளர்களது எல்லைத் தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில்கள் மற்றும் அத்துமீறியதும், தடைச் செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான ஏனைய மாவட்டங்களின் கடற்றொழிலாளர்களின் கடற்றொழில்கள் காரணமாக எமது கடற்றொழிலாளர்களால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் கடற்றொழில் செய்ய இயலாத நிலைமைகள் தொடர்ந்து இருந்து வருவதுடன், எமது கடற்றொழிலாளர்களது தொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டும், எமது கடல் வளம் சுரண்டப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றது.

அந்தவகையில் எமது மக்களின் பிரதான வாழ்வாதாரங்களாக எமது பகுதியிலுள்ள மண் மற்றும் கடல் வளங்களால், எமது மக்களுக்கு உரிய வாழ்க்கையினை வழங்க இயலாத நிலை காணப்படுகின்றது. இந்த இரு தொழில் துறைகளும் சாராத மக்களில் பெரும்பாலானவர்களது வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து உதவும் ஒரு துறையாகவே பனை வளம் காணப்பட்டது. இன்று, இத்துறையும்கூட எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போகின்ற நிலையும் காணப்படுவதுதான் எமக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக இருக்கின்றது.

Related posts:

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். டக்ளஸ் தேவானந்தா வேண...
வடக்கில் 14 தபாலகங்கள் தனியார் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டி...
வடக்கில் பாலுற்பத்தியை மேம்படுத்த முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். - நாடாளுமன்றில் டக்ளஸ் த...

நிலையான பொருளாதார வியூகத்தின் பலவீனமே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் - டக்ளஸ் எம்.பி நா...
பருத்தித்துறை, குருநகர், பேசாலை, பலப்பிட்டிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கு இந்தியாவுடன் புரிந்...
காங்கேசன்துறை சரக்கு படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு இன்று அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...