யாழ். இராமநாதன் நுண்கலை அக்கடமிக்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, November 21st, 2017

யாழ்ப்பாணத்தில் உள்ள இராமநாதன் நுண்கலை அக்கடமி என்பது இன்னமும் வெறும் பெயரளவிலேயே இருந்து வருகின்றதே அன்றி, அது உத்தியோகப்பூர்வ நிறுவனமாக இல்லை. எனவே, இது தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் உயர் கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் அவர் உரையாற்றுகையில் –

இலங்கை அழகியல் கட்புல பல்கலைக்கழகத்தை எடுத்துக் கொண்டால் அங்கு கண்டிய நடனம், சப்பிரகமுவ நடனம், தென்பகுதி நடனம் போன்றவற்றுக்கான துறைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களின் பாரம்பரிய கலையான பரத நாட்டியத்திற்கென ஒரு துறை இல்லாத நிலையே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இன்று, பரதநாட்டியத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சகோதர சிங்கள மக்களும் அக்கறை காட்டுகின்ற நிலையில் பரத நாட்டியம் மற்றும் கர்நாடக இசை தொடர்பிலான துறைகளையும் இங்கு ஏற்படுத்துவதன் மூலமாக அத்துறைகளில் அக்கறை கொண்டுள்ளவர்களால் அதனைக் கற்க முடியும்.

மேலும், யாழ் பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலை அக்கடமி என்பது இன்னமும் வெறும் பெயரளவிலேயே இருந்து வருகின்றதே அன்றி, அது உத்தியோகப்பூர்வ நிறுவனமாக இல்லை. எனவே, இது தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.

எமது நாட்டில் இரண்டாவது பெரும்பான்மை சமயமான இந்து சமயத்திற்கென இந்து கற்கைகள் பீடமொன்று எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இல்லை. ஏனைய சமயங்களுக்கு அந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, யாழ் பல்கலைக்கழகத்தில் அல்லது, ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் இந்து சமய பீடமொன்றை ஏற்படுத்துவதற்கு கௌரவ அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், யாழ் பல்கலைக்கழகத்தில் 06 வருட கற்கை நெறியாக விளங்குகின்ற சித்த மருத்துவ கற்கை நெறி தொடர்பில் எவ்விதமான நிறுவன ரீதியலான அந்தஸ்தும் இன்றியே காணப்படுகின்றது. இதற்கென ஒரு துறையோ, பீடமோ, நிறுவனமோ இல்லை. 1983ஆம் ஆண்டிலிருந்தே இந்த நிலை தொடர்கின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு, விரைவான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.

Untitled-2 copy

Related posts:

அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பும் விடிவெள்ளியாக திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா - முல்லை. கேப்பாப்புலவு ...
டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கமைவாக கிட்டங்கிப் பாலத்தை அமைப்பதற்கு இடைக்காலத் திட்டம் தயார்...
யாழ் பல்கலையில் நிறுத்தப்பட்ட கற்கைநெறி தொடர வேண்டும் - அமைச்சர் டக்ளஸிடம் வேண்டுகோள்!

துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறு...
வி.எம்.எஸ் செயற்படாத மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்களிடம் சேவைக் கட்டணம் அறவிட வேண்டாம் -அமைச்சர் ட...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் தி...