வவுனியாவுக்கு ஜனாதிபதி விஜயம் அமைச்சர் டக்ளசின் பங்கேற்புடன் வன்னி மாவட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Saturday, November 19th, 2022


……
வவுனியா மாவட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிகாரிகளுடனான  கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றலுடன், வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

முன்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியா மாவட்டத்துக்கன விஜயம் ஒன்றை இன்றையதினம்  மேற்கொண்டிருந்தார்.

வவுனியா வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா விமானப் படைத் தள்தில் வரவேற்றிருந்தார்.

இந்நிலையில்.வவுனியா நகர சபை  மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது மாவட்டங்களின் நிலவரங்களையும் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்.

இதன்போது பிரதேசச் செயலகங்கள் தோறும் கிராம சேவகர் பிரிவுகளை ஒன்றிணைத்து அவற்றுக்கான உத்தியோகஸ்தர்களை நியமித்து உணவு உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வுகளையும், உணவு உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்புக்களையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வவுனியாவில் தெரிவித்திருந்தார்.

Related posts:

யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எ...
சமகால அரசியல் மற்றும் கடல்தொழில் நீரியல் வள மூல அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் த...
எமது மக்களின் நலன்களையும், வளங்களையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கம் - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவ...

மதுவரிக் கட்டளைச் சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் ட...
ஊர்காவற்துறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஷேட விஜயம் - வீடுகளை அமைப்பதற்காக இனங்கானப்பட்ட காணியையும் பார்வ...