பனை தென்னை வளம் சார் உற்பத்திகளை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022

பனை தென்னை வளம் சார்பான உற்பத்திகளை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வலிகாமம் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணிக்கான புதிய தலைமைக் காரியாலயம் மற்றும் மண்டபம் போன்றவற்றை இன்று திறந்து வைத்து உரையிற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், அரசியல் நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னோக்கி நகர வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

அத்துடன், மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருந்து அரசியல்  செய்கின்றவர்களை மக்கள் அடையாளங் கண்டுகொண்டு, பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக சிந்திக்கும் தன்னுடைய கரங்களை மக்கள் பலப்படுத்தினால், மக்களின் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்

000

Related posts:


தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்கும் அக்கறை தமிழ் மக்கள் மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெர...
மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது – ஊடகவியலாளர் சந்திப...
சுழியோடிகளின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை - நியாயமான தீர்விற்கும் நடவடிக்கை!