அரசின் திட்டங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு புரியும்படியாக அமையவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, June 21st, 2018

எமது நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றபோதும் இந்தத் திட்டங்களுக்கு அரசாங்கம் சூட்டும் திட்டப்பெயர்களும் அத் திட்டங்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் வசதிகள் என்பன நாட்டிலுள்ள அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும்படியானதாக இருப்பதில்லை என்பதை நான் இந்த உயரிய சபையில் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன். நான் சுட்டிக்காட்டிய பல புரியாத திட்டப் பெயர்கள் பின்னர் புரியும்படியாக தமிழில் திருத்தப்பட்டுள்ளது அதற்காக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்ததுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் 1990 சுவசெரிய மன்றத்தினை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏறப்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அதுபோலவே இன்று நாம் விவாதம் நடத்திக்கொண்டு இருக்கும் “சுவசெரிய” என்ற திட்டமும் சாதாரண மக்களுக்கு குறிப்பாக தமிழ் மொழி பேசும் மக்களுக்கு புரியும்படியாக இல்லை. இந்தத் திட்டம் என்ன? என்பதையோ இந்தச் சொல் என்ன? அர்த்தத்தைக் குறிக்கின்றது என்பதையோ இலகுவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே “சுவசெரிய” எனும் சொல்லின் அர்த்தத்தை தமிழ் பேசும் மக்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதுபோலவே இந்த துரித நோயாளர் வண்டிச் சேவையை மலையகம் வடக்கு கிழக்கில் செயற்படுத்தும்போது சாரதிகளாகவும் நோயாளர் உதவியாளர்களாகவும் கடையாற்றுவோர் அந்தந்த மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவகையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும். ஏன் என்றால் அந்த மக்கள் இலகுவாக தொடர்பு கொள்ளக்கூடிய வகையிலும் அந்த மக்களின் பிரச்சனைகள் தேவைகளை புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் இந்த சேவையில் ஈடுபடுவோர் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த துரித சேவை ஊடாக இந்த நாட்டு மக்கள் பயன்பெறுவார்கள் என்று கருதும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களின் எண்ணம் நிறைவேறும்.

Related posts:

அனுபவங்களூடாக ஆற்றல்களை மேம்படுத்தி சமூக முன்னேற்ற த்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் -...
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாருக்காக ஜெனீவா சென்றார்கள்? நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந...
வவுனியா மாவட்ட மக்களுக்கும் விரையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு – துறைசார் அதிகாரிகளுடனான சந்...