கிளிநொச்சி ஆலய வளாகத்தில் நில அளவை தடுத்து நிறுத்தப்பட்டது – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Sunday, May 21st, 2023

கிளி. உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நில அளவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிட்டிருந்த நிலையில், அதனை , ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நிலமைகளை தெளிவுபடுத்தியதன்  விளைவாக நில அளவைப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் கோ.றுஷாங்கன் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன், ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள், பக்தர்கள், உள்ளூர் மக்களைச் சந்தித்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற அமைச்சரின் செய்தியை நேரில் தெரிவித்தார்.

ஆலய பரிபாலனசபைத் தலைவர் பசுபதிப்பிள்ளை, உப தலைவர் சிவஞானசுந்தரம், செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் அமைச்சரின் இணைப்பாளருடன் நீண்ட நேரம் கலந்துரையாடி, நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

"சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்" எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ...
பொருளாதார நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் நோக்கில் சாதகமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பா...
மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

இனவாதம் ஒரு நச்சு விதை : அது எத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப் பட்டாலும் அதனை அடக்க வேண்டும் - டக்ளஸ் ...
மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் - ந...
உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்திக் கொடி தினத்தை ஆரம்பித்து வைத்தார் அ...