தீவகத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் பணிகள் தொடரும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, September 28th, 2016

நெடுந்தீவு மக்களுக்கு நாம் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியின் பயனாக குடிநீர்த் திட்டம் தற்போது எவ்வாறு சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ? அதேபோன்று வேலணை மற்றும் ஊர்காவற்றுறைப் பகுதிகளுக்கும் குடிநீர்த் திட்டம் ஒன்றை வழங்குவதில் நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கட்சியின் வேலணை அலுவலகத்தில் இன்றைய தினம் (28) இடம்பெற்ற  பொது அமைப்புகளின் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காலம் காலமாக தீவகப் பகுதியில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பலத்த இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, கோடைகாலங்களில் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும், கால்நடைகள் குடிநீருக்காக அலைந்து திரிவதும் வழக்கமானதொன்றாக உள்ளது.

3

இந்த அவலத்தைக் கருத்திற் கொண்டே நான் யாழ்ப்பாணம் – இரணைமடு குடிநீர்த் திட்டத்தின் ஊடாக தீவகப் பகுதிக்கும் குடிநீர்த் திட்டத்தை கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்தோம். ஆனால், மக்களின் நலன்களைக் கருத்திற்கொள்ளாத சுயலாப அரசியல்வாதிகள் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். இதன்காரணமாக தீவகத்திற்கான குடிநீர் விநியோகத் திட்டமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதை யாவரும் அறிவீர்கள்.

நெடுந்தீவில் பன்னெடுங்காலமாக மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் எதிர்கொண்ட இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு 50 மில்லியன் ரூபா செலவீட்டில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் லீற்றர் குடிநீர் கடல் நீரை நன்னீராக்கும் செயற்திட்டத்தின் ஊடாக மக்கள் பெற்றுவருகின்றனர்.

இது கடந்தகாலங்களில் அரசுடனான எமது நல்லுறவின் ஊடாகவும், புரிந்துணர்வின் ஊடாகவும் கிடைக்கப்பெற்ற ஒரு வெற்றியாகவே நாம் கருதுகின்றோம். இத்திட்டத்தின் ஊடாக நெடுந்தீவு மக்கள் மாத்திரமன்று கால்நடைகளுக்கும் விவசாயச் செய்கைக்கும் இந்நீரை பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.

2

இதேபோன்றுதான் வேலணை மற்றும் ஊர்காவற்துறைப் பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு கடல்நீரை நன்னீராக்கும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதனூடாக மக்களுக்கும் கால்நடைகளுக்கும் விவசாயச் செய்கைக்கும் பயன்படுத்துவது தொடர்பில் நாம் மிகுந்த அக்கறையுடன் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம்.

குறித்த தீவுப் பகுதியில் மழைநீரை சேகரிக்கும் விதமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் அவசியம் தொடர்பிலும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெளிவுபடுத்தினார்.

அத்துடன் எதிர்காலங்களில் புகையிலை செய்கைக்கு அரசு தடை ஏற்படுத்தும் பட்சத்தில் அதற்கு மாற்றீடான பயிர்ச் செய்கை தொடர்பில் தாம் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே தீவகத்தில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் அதேவேளை கால்நடைகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் எதிர்வரும் காலங்களில் தீவகத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் முகமாக பயன்தரு மரக்கன்றுகளை நாட்டி அதனூடாக மக்கள் சிறந்த பலாபலன்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

1

இக்கலந்துரையாடலில் தீவக மக்களின் வாழ்வாதார பொருளாதார மேம்பாட்டு விடயங்களில் முன்னெடுக்கப்படக்கூடியதான ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் டக்ளஸ் தேவானந்தா அங்கு வருகை தந்தோரிடம் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மாவட்ட நிர்வாகச் செயலாளர் காவேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) மாவட்ட மேலதிக  செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்,வேலணை பிரதேச சபை முன்னாள் தலைவர் ந. கரணாகரகுருமூர்த்தி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர் ஏ.கே. ஞானமூர்த்தி(யசோ)  ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:

அரசியல் உரிமைக்கு தீர்வைக் காணுங்கள் தேசிய நல்லெண்ணம் தானாக உருவாகும் - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட...
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கூடாக மக்கள் நலன்சார் விடயங்களுடன் அபிவிருத்திகளையும் அர...
குற்றவாளிகளை நாட்டுக்குள் கொண்டுவரும் நிலையான சட்டங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலிய...

புனர்வாழ்வுபெற்ற போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு சலுகை அடிப்படையிலான வங்கிக்கடன் - டக்ளஸ் தேவான...
நீதியான போராட்டத்திற்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும் - உடுவில் பாடசாலை மாணவர் சமூகத்திற்கு டக்ளஸ் தேவா...
கல்வித் துறை தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!