மத அடையாளங்களை பிற மதம் சார்ந்த மக்களிடம் திணிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமானது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, June 21st, 2019

கௌதம புத்தர் அவர்களது சிலைகளை சேதப்படுத்துவது என்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கச் செயல் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அது, பௌத்த மதத்தினரை உணர்வு ரீதியாகப் புண்படுத்துகின்ற செயலுமாகும். அதே போன்று ஏனைய மதத்தவர்களது மத வழிபாட்டுத் தலங்களை, மத அடையாளங்களை அழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும். அது ஏனைய அந்தந்த மதத்தவரையும் உணர்வு ரீதியாக புண்படுத்தவே செய்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அதேபோல், கௌதம் புத்தர் அவர்களை வழிபடுகின்ற மக்களே இல்லாத இடங்களில், பிற மதத்தவர்கள் வாழுகின்ற நிலையில், அங்கே கௌதம புத்தர் அவர்களது சிலைகளை வைப்பதும் அந்தந்த மதங்களைச் சார்ந்த மக்களது உணர்வுகளைப் புண்படுத்துகின்ற செயலாகும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

அதேபோல் ஏனைய மதத்தவர்களும் தமது மத அடையாளங்களை பிற மதம் சார்ந்த மக்களிடம் திணிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமான செயற்பாடாகும்.

Related posts:

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்! -  டக்ளஸ் தேவானந்...
அழியும் மரபுரிமைச் சொத்தான நெடுந்தீவுக் குதிரைகளைக் காப்பாற்றுங்கள் - டக்ளஸ் தேவானந்தா!
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பி இருந்ததையும் இழந்துவிட்டோம் - துணுக்காய் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம...