‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, August 24th, 2018

அதைவிடுத்து, ‘சிறைச்சாலை என்பது நரகமே’ என்ற கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, கைதிகள் தொடர்பிலான நலன்கள் குறித்து அக்கறை காட்டாமல் விடுவது ‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ என்ற வாசகத்திற்கு முரணான விடயம் என்றே கருதப்படல் வேண்டும என நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெதரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதியதினம் மதுவரி திருத்தச் சட்டமூலம், அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையச் சட்டமூலம், 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி விஷேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்ஞறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இந்த ஆண்டானது அடுத்த ஆண்டிற்கான பெருந்தொகை கடனை செலுத்துவதற்கு ஆயத்தமான ஆண்டாக இருக்கவேண்டிய நிலையிலும், தொடர்கின்ற பணிப் பகிஸ்கரிப்புகள், போராட்டங்கள் என நாட்டின் பொருளாதார முன்னேற்ற நிலையில் பாதிப்புகளே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அண்மைக்காலமாக பெண் சிறைக் கைதிகளின் போராட்டங்கள் சிறைச்சாலையின் கூரையின் மீதேறி தொடர்ந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தன. அந்த வகையில், சிறைச்சாலையினுள் போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுவதைத் தடுக்குமுகமான ஏற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடாக மேற்படி பெண் சிறைக் கைதிகளின் போராட்டம், பொறுப்பு மிக்கவர்களால் இனங்காணப்பட்டாலும், மேற்படி கைதிகள் சிறைச்சாலைகளில் எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்ற குறைபாடுகள் தொடர்பிலும் பொறுப்பு வாய்ந்தவர்கள் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும என்றுமி; அவர் மேலரம் தெரிவித்துள்ளார்.

Related posts:

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் உரிமைகள் பெறுவதற்கான எமது மக்களின் துணிவின் ஆரம்பம் - டக்ளஸ் தேவானந...
தும்பளை தாமரை மலர்கள் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
இன - மத ரீதியான அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது - நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் அமைக்...