மக்கள் நலன்சார்ந்து சிந்திக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக இருப்பது சிறப்பானது என்று மதத் தலைவர்கள் தெரிவிப்பு!

Wednesday, December 11th, 2019

மக்களின் நலன்சார்ந்த சிந்தனைகளையும் துடிப்பான செயற்பாட்டினையும் வெளிப்படுத்தக் கூடிய ஒருவரான மூத்த அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை முழு இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி என்று சர்வ மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா அவர்களுக்கும் ஆசி வேண்டியும் அமைச்சு பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கான வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையிலும் சர்வ மத பிரார்த்தனை நிகழ்வு நேற்று (10.12.2019) இடம்பெற்றது.


அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சர்வ மத வழிபாடுகளில் இந்து, பௌத்த, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதத் குருமார்கள் கலந்து கொண்டதுடன், அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா ஆகியோருக்கு ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளு...
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தினமும் பேசுகிறார் அமைச்சர் டக்ளஸ்: சுமந்திரன் ஆதங்கம்!
உலக மாற்றங்களை எதிர்கொள்வதற்கான புதிய பாடத்திட்டம் வெற்றியடைய ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும். - அமைச்...