மக்கள் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு பொருத்தமான திணைக்களங்களை அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, February 5th, 2021

பாரபட்சமற்ற முறையில் அனைவரும் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தினது தீர்மானத்திற்கும் தன்னுடைய எதிர்பார்ப்பிற்கும் அமைய கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்கொள்ளுகின்ற அனைத்து பிரச்சினைகளும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு பொருத்தமான திணைக்களங்களை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கண்டாவளை பிரதேச சமுர்த்தி வங்கியின் கணனி மயமாக்கும் நிகழ்வி்ல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –

அழிவு யுத்தத்தால் சிதைவடைந்து கிடக்கும் எமது பிரதேசங்களையும் அங்கு வாழும் மக்களையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது. அதனடிப்படையிலேயே நான் இந்த கிளிநொச்சி மாவட்டத்தின் மீது அதிக அக்கறை கொண்டு கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றேன்.

அந்தவகையில் இங்குவாழும் மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது எதிர்காலம் கருதியதான சிந்தனையில் தெளிவடைந்து வருகின்ற சந்தர்ப்பங்களை சரியானவர்களின் கரங்களுக்கு கொடுக்க முற்படவேண்டும்.

அதனூடாகவே மக்கள் எதிர்கொள்கின்ற அடிப்படை பிரச்சினைகள் முதற்கொண்டு அனைத்துவகையான தேவைப்பாடுகளுக்கும் நிரந்தர தீர்வுகளை எட்டமுடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


குற்றவாளிகளை நாட்டுக்குள் கொண்டுவரும் நிலையான சட்டங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலிய...
அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
மண்கும்பானில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு...