நீர் வேளாண்மையை மேம்படுத்தும் மாபெரும் கருத்திட்டம் வடமராட்சி மண்டான் களப்பு பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுப்பு!

Wednesday, March 3rd, 2021

வடமராட்சி – மண்டான் பிரதேச களப்பு பகுதியில் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இறால் குஞ்சுகளை உள்ளீடு செய்யும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் (3) நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது வழிநடத்தலில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைய சுமார் 2.2 மில்லியன் பெறுமதிகொண்ட 40 இலட்சம் இறால் குஞ்சுகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மண்டான் களப்பு பகுதியில் உள்ளீடு செய்யப்பட்டது.

களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்திட்டத்தின் பயனாக மண்டான் பிரதேசதத்தில் வாழும் 270 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.

முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கறித்த அமைச்சு பொறுப்பை ஏற்றதன் பிற்பாடு வடக்கு மாகாணத்தின் பல்வேறு நீர் நிலைகளில் கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் வகையில் கடல் உயிரின உள்ளீடு செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் அதனூடாக கடற்றொழிலாளர்கள் தமக்கான வாழ்வாதார பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொண்டமானாறு பாலத்தினை அண்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

குறிப்பாக, தொண்டமானாறு களப்பு பிரதேசத்தில் கடலுணவு வளர்ப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான  சாதக பாதகங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வடக்கில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலை மேற்கொள்ள வழிசமைத்துக் கொடுத்தவர்கள் நாம் - பாஷையூரில...
அரசியல் அதிகாரங்கள் எம்மிடம் இருந்தபோது மக்களுக்காக நாம் சாதித்துக் காட்டியவை ஏராளம் – ஊடக சந்திப்பி...
முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

பிறந்திருக்கும் புத்தாண்டில் எமது மக்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும்; செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
வடக்கின் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றி...
அதிகாரிகளுக்கு பிரச்சினைகள் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர, ஆரம்பிக்கப்பட்ட வேலைத் த...