மக்களுக்கு பாதகம் ஏற்படும் செயற்றிட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 27th, 2018

எமது எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவகையில் உரிய தீர்வுகளைப் பெற்றுத்தரக்;கூடியவரா உங்களை நாம் எதிர்பார்த்துள்ளபடியால் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதிசெய்யக் காத்திருக்கின்றோம் என ஊர்காவற்றுறை மேற்குத் தெரு மக்கள் தெரிவித்துள்ளனர்

ஊர்காவற்றுறை மேற்குத்தெரு பகுதியில் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

நாம் இன்றும்கூட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தபடி உரிய தீர்வுகளுக்கான எதிர்பார்ப்புக்களுடன் வாழ்ந்துவருகின்றோம்.

எமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் இதுவரையில் வடக்கு மாகாணசபை எவ்விதமான நடவடிக்கைகளையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. எனவேதான் எமது எதிர்பார்ப்புகளுக்கும் கனவுகளுக்கும் உரிய பதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக நாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதிசெய்யக் காத்திருக்கின்றோம்.

எமது பகுதியில் மயானத்திற்கான வீதி புனரமைப்பு, குடிநீர், வீடமைப்பு வசதி உள்ளிட்ட தேவைப்பாடுகளுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறவேண்டியது அவசியமானது என்றும் அந்த மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மக்களது பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்துகொண்டபின் கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா –

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக நாம் எவ்விதமான சவால்களையும் நெருக்கடிகளையும் கண்ட அஞ்சப்போவதில்லை. மக்களின் தீர்த்துவைப்பதே எமது பிரதான கடமையாகும். அந்தவகையில் மக்களுக்கு பாதகம் ஏற்படும் செயற்றிட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோகமாட்டோம்.

இதனடிப்படையில் தான் இப்பகுதியில் கடற்படையினருக்கென காணி சுவீகரிக்கப்படவிருந்த நிலையில் அதை தடுத்து நிறுத்தி மக்களின் இயல்பு வாழ்வுநிலையை நாம் உறுதிப்படுத்தியிருந்தோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இங்குள்ள மக்கள் குடிநீருக்கு பேரும் அவலப்படுகின்ற நிலையில் குடிநீர்பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு யாழ்ப்பாணம் – இரணைமடு குடிநீர் திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்த முயன்றபோது அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தடுத்து நிறுத்தியதனாலேயே இப்பகுதி இன்றும் குடிநீருக்கு பெரும் அவலப்படுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.ஷ

Related posts:


அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதால் மக்கள் பணமே விரயமாகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...
திருமலைக்கு அமைச்சர் டக்ளஸ் வியஜம் - கோணேஸ்வரம் ஆலயத்தின் பரிபாலன சபையினருடன் விசேட கலந்துரையாடல்!
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்பு தொடரும் - அரசியல் கைதிகள் விடுதலை த...