திருமலைக்கு அமைச்சர் டக்ளஸ் வியஜம் – கோணேஸ்வரம் ஆலயத்தின் பரிபாலன சபையினருடன் விசேட கலந்துரையாடல்!

Tuesday, October 11th, 2022

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் பரிபாலன சபையினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில்,  ஆலயத்தின் சுற்றுச் சூழலில் இடம்பெறும் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், அதுதொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலைக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டுள்ளார்.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மதங்களின் விழுமியங்களும் நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போதைய அரசாங்கம் இருகின்ற நிலையில்,  எந்தவொரு மதத்தினதும் நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
– 11.10.2022

Related posts:

அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன...
தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும்அமைச்சர்...
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!