மக்களுக்கு கௌரவமான வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனறே தொடர்ந்தும் அரசியலில் இருக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020

இனத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்  போராட்டம் காரணமாக உயிரிழந்த அனைவரினதும் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் வாழுகின்ற மக்களுக்கு கௌரவமான சிறந்த வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பளை நகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நான் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப போராளி என்ற வகையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு தார்மீக பொறுப்பை ஏற்பதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வாழுகின்ற மக்களுக்கு கௌரவமான சிறந்த வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அயராது உழைத்துவருகின்றேன் என்றும் தெரிவித்தார். அத்துடன் அதன் காரணமாகவே தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

13ஆவது திருத்தச் சட்டத்தினூடாகவே நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும் - டக்ளஸ் தேவானந்தா
களுத்துறை மாவட்ட தமிழ்க் கல்வித்துறையில் அரசு அதிக கவனமெடுக்க வேண்டும் - கல்வி அமைச்சரிடம் டக்ளஸ் எம...
தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...

மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்?...
கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களூடாக மக்கள் நலன்களை முன்னெடுத்து  சாதித்துக் காட்டுங்கள் - கிளிநொச்சியில...
இந்திய வெளியுறவு அமைச்சர்.ஜெயசங்கர் இலங்கை வருகை - நாளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - இந்திய வெறியுறவு...