எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு இளைய சமூகம் நம்பிக்கையுடன் முன்வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, October 15th, 2017

இளைய மூகத்தின் எதிர்காலத்தை பாதுகாத்து பலப்படுத்திக்கொள்ளும் செயற்றிட்டங்களை வகுத்து அவற்றை முன்கொண்டு செல்வதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின்  தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம்(15) வருகை தந்திருந்த ஒருதொகுதி இளைஞர் யுவதிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இளைய சமூகத்தினர் தமது எதிர்காலம் தொடர்பில் ஒருபோதும் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது.  மாறாக நம்பிக்கையுடன் சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து அவற்றை வெற்றிகொள்வதற்கான மனோநிலையை வளர்த்தெடுக்கவேண்டும். அதன்போதுதான் எதிர்காலத்தை பாதுகாத்து பலப்படுத்திக்கொள்ளமுடியும்.

அதுமாத்திரமன்றி உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றுதல்களுக்கும் இடங்கொடுத்து அதனால் தமது வாழ்வையும் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. நிலையான நிம்மதியான வாழ்வை பெற்றுக்கொள்வதற்கு எப்போதும் விடாமுயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் உழைக்கவேண்டும்.

அப்போதுதான் வாழ்க்கையின் ஒவ்வொரு தடைக்கற்களையும் வெற்றிகொண்டு முன்னேற்றங்காண முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:


அத்துமீறிய கடற் தொழிற் செயற்பாடுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தே...
நந்திக்கடல் பிரதேசத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்...
நெடுந்தீவிற்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் - இவ்வாண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு...