அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் புத்தெழுச்சி பெறுகிறது புதுமுறிப்பு!

Monday, June 19th, 2023

புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ள  நிலையில், இன்று குறித்த பகுதிக்கான விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார்.

இந்த உற்பத்தி நடவடிக்கைகள் மூலம் புதுமுறிப்பு நன்னீர் மீனவர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 40 குடும்பத்தினருக்கு நிரந்தர வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால், சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதியில், கைவிடப்பட்டிருந்த நன்னீர் மீன் உற்பத்தி தொட்டிகளில் முதற்கட்டமாக 5 தொட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீன் குஞ்சு உற்பத்திகளை மேற்கொள்ளக் கூடிய மேலும் 5 தொட்டிகள் தெரிவு செய்யப்பட்டு 10 தொட்டிகளில் உடனடியாக உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய தொட்டிகளையும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, உடனடியாக 10 தொட்டிகளில் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அண்ணளவாக 4 இலட்சம் நன்னீர் மீன் குஞ்சுகளை இரணைமடு குளம் உட்பட்ட நன்னீர் நீர் நிலைகளுக்கு விநியோகிக்க முடியும் எனபதுடன், புதுமுறிப்பை சேர்ந்த சுமார் 40 குடுமபங்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை சுமார் 6 இலட்சம் வருமானத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றினால் புதுமுறிப்பு பகுதியில் சுமார் 30 நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி தொட்டிகள் உருவாக்கப்பட்டு பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்ட போதிலும், 2017 ஆண்டிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் அவை சேதமடைந்திருந்தன. இந்நிலையிலேயே 2019 ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் குறித்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பயணிகளின் பாதுகாப்பில் அக்கறையோடுசெயற்படுங்கள் - வடக்கு, கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ச...
அமைச்சரானார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் வடபகுதி மக்கள் !
ஜனாதிபதியின் விஷேட புத்தாண்டு கொண்டாட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுச் சிறப்பிப்...