மக்களின் விருப்பத்தை சிதைக்க எந்தவொரு சக்தி முனைந்தாலும் அனுமதிக்க மாட்டேன்: செம்பியன்பற்று மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, July 5th, 2020

மக்கள் ஒன்றுபட்டு இருப்பார்களாயின் மக்களின் விருப்பத்திற்கு மாறான எவ்வாறான திட்டங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டேன் எனவும் சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றவர்கள் எவ்வாறான பின்னணியைக் கொண்டிருந்தாலும் அதுதொடர்பில் தனக்கு கவலை இல்லை எனவும் தெரிவித்தார்.

செம்பியன்பற்று வடக்கு பிரதேச மக்களினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செம்பியன்பற்று வடக்கு கிராமத்தை சுயநலன்களுக்காக சிலர் பிரிப்பதற்கு முயற்சிப்பதாக பிரதேச மக்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையிலேயே  குறித்த கருத்தினை அமைச்சர் வெளியிட்டார்.

மேலும், தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை கிராமத்தினை சேர்ந்த சிலர் மேற்கொள்வதன் ஊடாக கிராம மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார அச்சுறுத்தல் தொடர்பாகவும் அமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

அதுதொடர்பில் அவதானம் செலுத்திய  அமைச்சர் தேவானந்தா, கடற்றொழில் திணைக்களம் மற்றும் சம்மந்தப்பட்ட  தரப்புக்களுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: