மக்களது பிரச்சினைகளுக்கு மக்களே காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 23rd, 2019

அரியாலை தென்மேற்கு உதயபுரம் பகுதி கடற்றொழிலாளர் சங்க பகுதி மக்கள் தமது பிரதேசத்தில் காணப்படும் அத்தியாவசியமானதும் அடிப்படைத் தேவையுமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம்(23) குறித்த பகுதி மக்களது அழைப்பின் பெயரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்று உதயபுரம் செபஸ்ரியார் நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே குறித்த பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் நீண்டகாலமாக இப்பிரதேசத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகள் காணப்பட்டாலும் அவை இதுவரை தீர்வுகாணப்படாது இருந்துவந்துள்ளது.

குறிப்பாக கடல் அணை தடுப்பு, தபால் நிலையம், பொதுநோக்கு மண்டபம், பொதுச்சந்தை, தெரு மின்விளக்கு பொருத்தல். பிரதான வீதி புனரமைப்பு. வாழ்வாதார உதவித்திட்டங்கள் போன்றவற்றுக்கு தீர்வுகண்டுதருமாறு சந்திப்பின்போது குறித்தபகுதி மக்களால் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மக்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபின் கருத்து தெரிவித்த அமைச்சர்-

இப்பகுதி ஒரு கடல் சார் தொழிலை மையாமாகக் கொண்ட மக்களை உள்ளடக்கியுள்ளதால் இப்பகுதியில் அது தொடர்பான தொழில் முயற்சிகளை உருவாக்கி இங்குள்ள மக்களுக்கான பொருளாதார நிலைமைகளை மேம்படுத்திக்கொள்ள முடியும் என நம்புகின்றேன்.

தற்போது நான் கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக இருப்பதால் இதனூடாக கடல் உயிரின வளர்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடை தொழில் ரீதியான திட்டங்களை இப்பகுதியில் உருவாக்கி மக்கள் பாதுகாப்பாக தத்தமது தேவைப்பாடுகளை தாமே தீர்க்கக் கூடிய பொருளாதாரத்துடன் முன்னேற்றம் காணவேண்டும் என்பது தொடர்பாக செயற்றிட்டங்களை முன்னிறுத்தவுள்ளேன்

கடந்த கால வரலாறுகளை பார்க்குமபோது எமது மக்களது பிரச்சினைகளுக்கு மக்களே காரணமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதுமட்டுமல்லாது மக்கள் இதுவரை தமது எதிர்காலம் தொடர்பில் சிந்திக்காதுள்ளனர். சுயனலன்களுக்காக ஏமாற்று தரப்பினருக்காக பின்னால் சென்றுகொண்டிருப்பது எதுவிதத்திலும் மக்களுக்கு நலன்களை தரப்போவதில்லை என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

மக்கள் எம்மை தோற்கடித்தாலும் நாம் மக்கள் நலன்களையே சிந்தித்து செயற்பட்டு வருகின்றோம். ஆனாலும் தொடர்ந்தும் அவ்வாறான் நிலையில் இருந்துவிட முடியாது.

மக்கள் தத்தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமானால் எனது கரங்கள் பலப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் மக்கள் இதுவரை அவ்வாறு எமக்கு அதிகாரத்தை தராதுள்ளனர். அவ்வாறான ஒரு நிலைமையை மக்கள் எமக்க தருவார்களானால் வாழ்வாதாரம் மட்டுமல்லாது அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் எம்மால் தீர்வு பெற்றுத்தர முடியும் என்றார்.

Related posts: