தீவகத்தின் மகுடத்தை துறையூர் ஐயனாருக்கு வழங்கிவைத்தார் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 18th, 2017

சமூகத்தை நல்வழிப்படுத்டுதுவதில் விளையாட்டின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. அதனை உணர்ந்துகொண்டு இளைய சமூகத்தினர் எதிர்காலங்களில் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தீவக கிண்ணம் 2017 உதைபந்தாட்டம் வேலணை ஐயனார் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

மின்னொளியில் நடத்தப்பட்ட இறுதியாட்டத்தில் புங்குடுதீவு சண்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்திறிகும் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்த சிறப்பித்து பரில்களை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு சமூகம் வளர்ச்சியும் காணவேண்டுமாயின் கல்வித்துறைக்கூடாக மட்டும் சாதித்துக்கொள்ள முடியாது. மாறாக விளையாட்டுத்துறையும் பக்கபலமாக இருக்கும் நிலையில் அதனை உணர்ந்துகொண்டு இளைய சமூகத்தினர் மட்டுமல்லாது பெரியவர்களும் ஒருங்கே இணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த இறுதியாட்டத்தில் புங்குடுதீவு சண்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்திறிகும் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையேயான பொட்டியில் துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் 4:0 என்ற அடிப்படையில் வெற்றியை தனதாக்கி திவகத்தின் மகுடத்தை சூடிக்கொண்டது.

32 அணிகள் பங்கபற்றிய இந்த தொடர் முதன் முறையாக தீவகத்தில் மின் ஒளியில் தீவக உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் ஞானமூர்த்தி உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Related posts:

உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சி னைக்கு தீர்வு காணமுடியும் -  வவுனியாவில் செயலா...
நாம் வெற்றிபெறும் பட்சத்தில் உங்களுடைய எண்ணக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் - பூந்தோட்டத்தில் டக்ளஸ் எ...
சூரிய மின் உற்பத்தி தொடர்பில் மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது தொடர்பில் எப்போதாவது ஆராய்ந்து ப...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அரசியல் சூழ்நிலை குறித்து ஆராயும் விஷேட பொதுக் கூட்டம் !
திலீபனை நினைவு கூறும் விடயத்தை தூக்கிப் பிடிப்பது மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கு அபகரிப்பிற்காகவே ...
யாழ். மருத்துவ பீடம் மற்றும் வடக்கு கல்வி சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்கு விரைவில் தீர்வு - அமைச்ச...