நீண்ட கால இழுபறிக்கு வழங்கப்பட்டது தீர்வு – சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, June 14th, 2024

சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை ஒதுக்கி கொடுப்பதில்  பிரதேச செயலகம் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவந்த இழுபறி நிலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு ஓர் இலகுவான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டுவந்த அமைச்சர் குறித்த பகுதிக்கு  இன்று நேரடி களவிஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.

அத்’துடன் நிலைமைகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி A9 கண்டி வீதி நுணாவில் பகுதியில் சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான இடத்தினை பெற்றுக் கொடுத்து நீண்டநாள் இருந்துவந்த இழுபறிக்கு தீர்வை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


வசாவிளான் குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைய விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
சிலாபம் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட ...
வடக்கின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!