வசாவிளான் குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைய விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 31st, 2020

வசாவிளான் குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பிரதம விருந்தினராக கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்று விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார்.

இன்று பிற்பகல் குறித்த விளையாட்டு நிகழ்வு பாடசாலையிம் மைதானத்தில் அதிபர் திரு பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வை அமைச்சர் சம்பிரதாயபுவமாக ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றிய அமைச்சர் –
பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் வளப் பிரச்சினைகள் தொடர்பில் நிச்சயமாக நான் தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பேன்.

அத்துடன் மாணவர்களுக்கான மதிய உணவு பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியையும் நான் மேற்கண்டு தருவேன். அதுமட்டுமல்லாது மாணவர்களும் கல்வித்தரத்தை அதிகரிப்பதற்கான அக்கறையுடன் கல்வியை முன்னெடுக்க வேண்டும்.என்பதுடன் பெற்றோரும் வரும் காலங்களில் வரவுள்ள அரசியல் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி உங்களது எதிர்காலத்தை வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர்தெரிவித்தார்.

Related posts:


தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் - நாடாளுமன்றில் எடுத்துரைத்த ட...
அமரர் சிவஞானசோதியின் இழப்பு எனக்கு மட்டுமல்லாது இலங்கைத் தீவுக்கும் பேரிழப்பு – அஞ்சலி உரையில் அமைச்...
சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் வ...