போட்டி போட்டு சாரதித்துவம் செய்யும் அரச மற்றும் தனியார் பேருந்துகளால் அதிக ஆபத்து – குறித்த தரப்பினர் பொறுபுணர்வுடன் செயற்பட வேண்டும் என – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!.

Thursday, April 18th, 2024

போட்டி போட்டு சாரதித்துவம் செய்யும் அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் செல்லும் மக்கள் அதிக அசௌகரியங்களை சந்தித்து வருவதால் அது குறித்து குறித்த தரப்பினர் பொறுபுணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

அண்மைய காலமாக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தரப்பினரால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாக பல மரணங்களும் அவயவ பாதிப்புகளும் செத்திழப்பு மற்றும் உடமைகள் சேதங்களும் ஏற்படுகின்றன.

இவற்றை கட்டுப்படுத்த முன்னே வருபவர்களும் உங்களின் உறவுகளே என்ற உணர்வுடன் சாரதிகள் செயற்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாது மக்களுக்கு இடையூறாக செயறடும் சாரதிகள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இதை வீதி போக்குவரத்தை கண்காணிக்கும் அதிகாரிகள் அதிக அக்கறையுடன் செயற்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாடில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறப்பு கலந்துரையாட...
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ள...
கிளிநொச்சி கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம் - புனரமைப்பு பணிகள் மற்றும் சட்ட விரோத மணல் ...