அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திருகோணமலையில் உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக குழுவின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்!

Saturday, January 9th, 2021

கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

முன்னதாக திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் கொட்பே மீன்பிடித் துறைமுகத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்

அத்துடன் திருகோணமலை, கொட்பே மீன்பிடித் துறைமுகத்தினை அண்டிய கடற் பிரதேசத்தில் தனியார் முதலீட்டாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொடுவா மீன் வளர்ப்பு பண்ணையின் நிலைமைகள் தொடர்பிலும் நேரில் பார்வையிட்டு  ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியை நோக்காக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணை முதலீட்டில் கொடுவா மீன் வளர்ப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

Related posts:


யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட குடிநீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள்...
நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – அமைசர் டக்ளஸ் தேவானந்தாவி...
'சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி' - அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,டக்ளஸ் தேவானந்தா ஆ...