கிளிநொச்சி கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம் – புனரமைப்பு பணிகள் மற்றும் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, March 15th, 2023

கிளிநொச்சி, கல்மடு குளத்திற்கான கள விஜயத்தினை  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நடைபெற்று வருகின்ற புனரமைப்பு பணிகள் மற்றும் குறித்த பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வு போன்றவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் தரப்பினருடன் கலந்துரையாடினார்.

‘நீர்பாசன செழுமை’ எனும் திட்டத்திற்கு அமைய உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் கல்மடு குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், குறித்த திட்டத்தினை பூரணப்படுத்துவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக நீர்பாபாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதியினை இத்திட்டத்திற்காக உலக வங்கி ஒதுக்கியுள்ள நிலையிலேயே மேலும் 300 மில்லின் ரூபாய் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் எதிர்வரும் மழை பருவ காலத்திற்கு முன்னர் முடித்து வைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. –

இந்நிலையில் தர்மபுரம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராம மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

குறிப்பாக, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கல்மடு குளத்தினை வாழ்வாதாரமாக கொண்டு சுமார் 75 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், குறித்த குளப் புனரமைப்பு நிறைவடையும் வரையில் மாற்று வாழ்வாதார ஏற்பாடு மேற்கொண்டு தருமாறு பிரதேச மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

உசுப்பேத்தல் முயற்சிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகக் குரல் எழுப்பும் தகுதி  டக்ளஸ் எம்.பிக்கு உண்ட...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!
மக்கள் நலன்சார் திட்டங்கள் அர்த்தமுள்ளவகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிட...

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! இதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - நாடளுமன்றத்தில் ட...
பேலியகொட மீன் சந்தையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!