பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, December 28th, 2018

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக இரண்டு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த நிதி போதாது எனவும் அந்நிதியை 25ஆயிரம் ரூபாவாக அதிகரித்து பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என இதன்போது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே இரணைமடுக் குளத்தின் நீர் முகாமைத்துவம் சீரின்மை காரணமாகவே மக்களுக்கு இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்தவர்களின் அசமந்த போக்கும் கவனயீனமும் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார்.

இதனடிப்படையில் துறைசார்ந்த அமைச்சரூடாக விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

49454806_2217334535204292_2943004036095279104_n

49415734_374781863093178_8987294658304409600_n

48936579_266230094049169_5273757391769305088_n 48912167_274964679832808_2748377816415338496_n

48427946_289346121728059_5437496341255159808_n

 

Related posts:

தீர்வுகள் எட்டப்படாத நிலைமைக்கு காரணம் மக்கள் சரியானனவர்களை தெரிவு செய்யாமையே காரணம் - டக்ளஸ் தேவானந...
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பிரேரணை கொண்டுவருவதற்கு அருகதை இருக்கிறதா – நா...
பணமோசடி செய்த சப்றா நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்...