காங்கேசன்துறை துறைமுகத்தின் இன்றைய நிலை என்ன ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, November 29th, 2016

கடந்த கால யுத்தம் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை துறைமுகத்தை மீளப் புனரமைக்கும் பணிகள் கடந்த 2013ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ம் திகதி இந்திய அரசின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக இது, உள்நாட்டு வர்த்தகத்துறை மற்றும் மீன்பிடித்துறை முன்னேற்றத்திற்கு மாற்றியமைக்கப்படும் என்றும், பெருமளவிலான தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டே இந்த அபிவிருத்திப் பணிகள் அப்போது முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று மூன்று வருடங்களுக்கு மேலாகியும் காங்கேசன்துறை துறைமுகம் தொடர்பில் – அதன் இலக்குகள் எனக் கூறப்பட்ட எந்தவொரு இலக்குகளும் எட்டப்படாத நிலையே காணப்படுகின்றன.

இந்த துறைமுகப் பகுதிக்கு நேரடி விஜயம் செய்து, அது தொடர்பில் கௌரவ அமைச்சர் அர்ஜூன ரணதுங்ஹ அவர்கள் ஆய்வு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எனவே, மேற்படி துறைமுகத்தின் இன்றைய நிலை என்ன என்பது குறித்தும், இதன் மூலமான பயன்களை எமது மக்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் கிட்டுமா? என்பது குறித்தும்  நான் இங்கு ஏற்கனவே அவதானத்தக்குக் கொண்டு வந்திருந்தமைக்கு இணங்க ஒலுவில் துறைமுகப் பகுதி தொடர்பில் அவதானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கும் எனது நன்றியைத் தெரிவித்து, ஒலுவில் மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் எதிர்கால இலக்குகள் என்ன என்பது குறித்தும், அமைச்சர் அரஜூன ரணதுங்ஹ அவர்களிடம் அறிய விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Untitled-1 copy

Related posts: