இந்தியாவிற்கு எதிராக எமது மக்களைப் பயன்படுத்த சீனா முயற்சிக்குமாயின் அதனை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!.

Friday, December 31st, 2021

சீனாவிடம் இருந்து எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் அபிவிருத்திசார் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொண்டாலும், இந்தியாவிற்கு எதிராக எமது மக்களைப்  பயன்படுத்த சீனா முயற்சிக்குமாயின்,  அதனை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தியிலும் இந்தியா தான் செய்து தருவதாக கூறி தற்போது முன்வந்துள்ளது. அத்துடன் என்னுடன் பேசுவதற்கும் அழைப்பு விடுத்து வருகின்றது. அதேபோன்று தனியார் சிலரும் முன்வந்துள்ளனர். சீனாவும் குறித்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளது. ஆனால் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நாம் மீளவும் கதைத்து அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறான நிலையில் நாம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்க முன்னுரிமை கொடுத்துள்ளபோதிலும் அவர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய இந்தியா முன்வந்தால் அதனையும் வரவேற்போம் என்றும் தெரிவித்த அமைச்சர் இந்தியாவிற்கு எதிராக எமது மக்களைப்  பயன்படுத்த சீனா முயற்சிக்குமாயின், அதனை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: