பொதுப்பாதை மற்றும் வாய்க்காலை இடைமறித்து தனியார் அமைக்கப்பட்ட பண்ணை விவகாரம் – சண்டிலிப்பாய்க்கு நேரடி விஜயம் செய்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, April 3rd, 2024

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் பொதுப்பாதை மற்றும் வாய்க்காலை இடைமறித்து தனியார் ஒருவரினால் அமைக்கப்பட்ட பண்ணையால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் பொதுமக்கள் பாவனையில் இருந்த வைரவர் கோவில் பொதுப்பாதை மற்றும் வாய்க்காலை இடைமறித்து பண்ணை அமைக்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ளம் வளிந்தோடுவதில் எற்படும் இடர்பாடகளால் பல்வேறு அசௌகரியங்களை தாம் எதிர்கொள்வதாக குறித்த பகுதி மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலைமைகளை பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களின் அபிப்பிராயங்களை கேட்டறிந்துகொண்டார்..

குறித்த கள விஜயம் இன்று (03.04.2024) மாலை இடம்பெற்றது. இதன்போது வலி தென்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர், சுற்றுற்சுழல் அதிகார சபை அதிகாரிகள் கிரமசேவையாளர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


எமது வாழ்வாதார போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யுத...
"அபிவிருத்திக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல” - எனினும் மக்களின் ஏகோபித்த இணக்கம் இன்றி எடுக்கப...
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப...