எமது வாழ்வாதார போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லை மக்கள் கோரிக்கை!

Saturday, November 24th, 2018

யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமது வாழ்வியல் நிலையில் எதுவித மாற்றங்களும் இதுவரை ஏற்படவல்லை என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முல்லைத்தீவில் இருந்து யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் அங்கங்களை இழந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள், முதியோர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மகளிர் அமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது மேலும் அவர்கள் தெரிவிக்கையில் – நீண்டகாலமாக தாம் எதுவித வாழ்வாதார உதவிகளோ அன்றி தமக்கான அடிப்படை தேவைகளோ இன்றி பல துன்பங்களை சந்தித்து வாழ்ந்துவருகின்றோம்.

அந்தவகையில் எமது இந்த வாழ்வாதாரப் பிரச்சனைக்கு தாங்கள் நிரந்தர தீர்வைக்கண்டு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த தரப்பினரது கோரிக்கைகளை அவதானத்தில் கொண்ட அமைச்சர் டக்ளழ் தேவானந்தா அவர்கள் துறைசார் தரப்பினரது கவனத’திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின் போது  கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ் (கிருபன்) உடனிருந்தார்

2 03 viber image

Related posts:

அசாதாரண சூழலை எதிர்கொள்ளுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தலைமையில் அவசர கலந்துரையாடல் - மீன்களை களஞ்சிய...
16 இலட்சத் தடுப்பூசி - வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுகின்...
தாளையடியில் அமைக்கப்படும் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தின் பணிகள் தொடர்பில் அமைச்சர்...

அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பு எச்சரிக்கைவிடுப்பது வேடிக்கை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
விரைவில் கிளிநொச்சி - வலப்பாடு பிரதான வீதி புதுப்பொலிவு பெறும் – டக்ளஸ் எம்.பி நம்பிக்கை தெரிவிப்பு...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ...