பூநகரி பிரதேச மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவிப்பு!

Thursday, February 8th, 2018

கிளிநொச்சி பூநகரி பிரதேச பிரிவுக்குட்பட்ட ஒருபகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தனர்.

கட்சியின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக தமது தேவைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தனர்.

அவற்றில் வாழ்வாதாரம், மின்சார வசதி, குடிநீர், வீடமைப்பு, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், சுயதொழில் ஆகிய விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய தீர்வுகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமது வாழ்வில் இதுவரையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது வாழ்வு நிலை குறித்து இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை.

வடக்கு மாகாண சபையிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தாம் பலதடவை தமது கோரிக்கைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா நீங்கள் உங்களது பிரதேச சபைகளை  வெற்றிகொண்டு எம்மிடம் தரும் பட்சத்தில் அந்த பிரதேச சபையூடாக உங்கள் பிரச்சினைகளுக்கு காலக்கிரமத்தில் தீர்வுகளைப் பெற்றுத்தர நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.

Related posts: