அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தொடர்ச்சியாக வலியுறுத்து – அதற்கிணங்கவே காணிகள் மீள வழங்கப்படுகின்றன – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Monday, March 11th, 2024

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்களின் ஒரு தொகுதி காணிகள்நேற்றையதினம் விடுவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரையாற்றும்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்து உரிமையாளர்களிடம்  மீள ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்திவருகின்றார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இன்று இந்த காணிகள் மீள ஒப்படைக்கப்படுகின்றன. 

குறித்த காணிகளை தமது பயன்பாட்டிலிருந்து விடுவித்து உரியவர்களிடம் மீள ஒப்படைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு படைத்தரப்பினர் ஒத்துழைப்புக்களை வழங்குவதையிட்டு அவர்களை பாராட்டுகிறேன் என்றும் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் செயலகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும்போது எமது மக்களின் காணிகள் எமது மக்களுக்கே உரித்தானது எனும் எமது கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைவாக எமது தேசிய நல்லிணக்க வழிமுறையூடாகவும், இணக்க அரசியல் அணுகுமுறையூடாகவும் எமது மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு எம்மால் முடியுமான தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.

அதனடிப்படையில் கடந்தகாலங்களிலும் சரி தற்போதும் சரி எமது தொடர்ச்சியான வற்புறுத்தல் காரணடாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக படையினர் வசமிருந்த பல ஏக்கர் காணிகளை விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

அந்த வகையில் எமது கோரிக்கைக்கு அமைவாக தொகுதி தொகுதியாக காணிகளை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கறையோடு தீர்வுகளைத் தருவார் என்று நம்புகின்றேன்.

அந்த நம்பிக்கையின் அங்கமாகவே தற்போதும் தினமும் ஒரு தொகுதி காணிகள் படையினரால் மீள ஒப்படைக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு விடுவிக்கப்படும் காணிகளை ஒப்படைக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாட்டில் மானுடம் வாழுகின்றவரை சந்திரசிறி கஜதீர சகோதரயாவின் நாமம் என்றென்றும் நிலைத்திருக்கும் - அனுத...
குடாநாட்டை அச்சுறுத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலை...