பூநகரியில் நிறுவப்பட்டது கடல் வள ஆய்வு மையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிகாரபூர்வமாக திறந்தவைப்பு!

Friday, April 5th, 2024

கடற்றொழில் அமைச்சரின் பெரும் முயற்சியின் பயனாக வடமாகாணத்துக்கான நாரா நிறுவனத்தின் உப அலுவலகம் பூநகரி தெளிகரையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நீர் வேளான்மை தொடர்பிலான உற்பத்தி பயன்கள் அனைத்தும் உச்சபட்சமாக எமது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனைக்கு மேலும் வலுவூட்டும் வகையில் இந்த நிறுவனத்தின் வரவு அமைந்துள்ளது.

வடபகுதி மக்களுக்கு நீர் வேளாண்மை தொடர்பிலான அதிகூடிய பயன்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக நாரா நிறுவனத்தின் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி  முகாமைத்துவ நிறுவனத்தின் 9 ஆவது கிளை நிறுவனம் பூநகரி பிரதேச செயலக பிரிவில் பள்ளிக்குடா தெளிகரையில் கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினல் இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை காலம் கொழும்பை தளமாக கொண்டு இயங்கிவந்த இந்த அலுவலகத்தை வடபகுதி மீனவர்களின் கடலுணவு உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் அதன் மூலமான புதிய  தொழில் வாய்ப்புக்கான வழி மூலங்களை கடற்றொழிலாளர்கள் அடைந்து கொள்வதற்குமான ஏற்பாடாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த முயற்சி அமைந்துள்ளது.

குறித்த ஆய்வுமமையத்தன் மூலம் புதிய மீன் உற்பத்தி வள மூலங்களை கடலில் கண்டறிவதுடன் புதிய மீன்பிடி முறைகள் அதற்கான தொழில்நுட்ப கல்வி அதன் வழியான விருத்தி பெறும் கடற்றொழிலாளர் சமுகத்தை உருவாக்கும் நீண்டகால திட்டத்தை இலக்காக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. .

குறித்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி நாடளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் தீலிபன் , யாழ்ப்பாணம்,  மன்னார், முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களின் அரச அதிபர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் கடற்படையின் அதிகாரிகள் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலதந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை - அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்தினுடன் முன்கொண்டுசெல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தல...
இழுவை வலைப் படகுத் தொழில் முறையை ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பில் நாரா முகவர் நிறுவனத்துடன்...