புதிய அரசியல் அமைப்பு முறை அமுலுக்கு வரும் என மக்கள் நம்பவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, October 25th, 2018

அரசியல் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பின் ஊடாக ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டும் என்கின்ற நம்பிக்கை இப்போது எமது மக்களிடமிருந்து அகன்று வருவதையும் நான் இந்தச் சந்தர்ப்பத்திலும் கூறியே ஆக வேண்டும். இதைத்தான் நான் ‘வரும், ஆனால் வராது’ எனக் கூறி வருகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நிதி, மதுவரி மற்றும் உற்பத்தி வரி சட்டமூலங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த புதிய அரசியல் யாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக – அல்லது அதில் அக்கறையுள்ளவர்களாகக் கூறிக் கொள்கின்ற தமிழ் அரசியல்வாதிகள், புதிய அரசியல் யாப்பு ‘இதோ முடிந்துவிட்டது, அதோ முடிந்துவிட்டது’ – ‘இதோ வருகிறது, அதோ வருகிறது”  எனக் கூறிக் கூறியே  இந்த அரசாங்கத்தின் முக்கால்வாசி காலத்தை வீணடித்து விட்டார்கள்.

இப்போது, ஒற்றையாட்சி என்றால் என்ன? ஒருமித்த நாடு என்றால் என்ன? என்பது பற்றி எமது மக்களுக்கு முன்பள்ளிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது, சிங்கள மக்களைத் திருப்திப் படுத்திக் கொண்டு, தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதும், தமிழ் மக்களைத் திருப்திப் படுத்திக் கொண்டு சிங்கள மக்களை ஏமாற்றுகின்றதுமான ஒரு கபட நாடகமாகும். இந்த ஏமாற்று நாடகம் எத்தனை மேடைகளில் அரங்கேற்றப்பட்டாலும், இதனால் இறுதிவரையில் ஏமாறப் போவது இந்த ஏமாற்றுக்காரக்களுக்கு வாக்களித்த எமது தமிழ் மக்களே என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இப்படியே எமது மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டக் கொண்டு இருக்கிறார்கள்.  இவ்வாறு எமது மக்கள் ஏமாற்றப்படுவது அரசியல் உரிமைகள் தொடர்பிலான விடயத்தில் மட்டுமல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts:

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வலியுறுத்து!
மன்னார் புதைகுழியில் அதன் உண்மையையும் புதைத்துவிடாதீர்கள் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட...
வடக்கில் மண்ணெண்ணை பிரச்சினைக்கு முதற் கட்டத் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திட்ட வரைபு!