வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள விவகாரம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மஹிந்த அமரவீர தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல்!

Thursday, September 22nd, 2022

வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுள், விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை எனப்படும் நீரியல் உயிரின வளர்ப்பு உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடங்களை விடுவித்து, உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பிரதேச மக்களிடம் கையளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான துறைசார் அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டக் கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய, வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சில்  இன்று(22.09.2022) இடம்பெற்றது.

துறைசார் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின்   அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: