தேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்காதவகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் — டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 22nd, 2017

காணாமற்போனவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு, அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். காணமற்போனவர்களது உறவுகளுக்கு நியாயம், பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதுடன் இந்த நாட்டில் மீண்டும் இத்தகைய நிலைமைகள் ஏற்பாடாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சிய்ன செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் 21 காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் நிறுவுதல் தெடர்பான திருத்தச்சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது, இனங்களுக்கிடையில் மீண்டும் கசப்புணர்வுகள் ஏற்படாத வகையில்,தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதையே இந்த விடயத்தில் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

நான் ஏற்கனவே கூறியதைப் போல், எமது நாட்டில் பல்வேறு முறையிலான பொறிமுறைகளின் ஊடாக ஆணைக்குழுக்கள் உருவாக்கம் பெற்றபோது, காணாமற்போன தமது உறவுகள் தொடர்பில் துன்ப, துயரங்களைச் சுமந்து அங்கு சென்ற போதிலும், இறுதியில் அவற்றின் மூலமாக எவ்விதமான ஆறுதல்களும் கிடைக்கப் பெறாமல்,வெறுங்கையுடன் திரும்பிய எமது மக்கள் மத்தியில் தற்போது உருவாக்கப்படுகின்ற இந்த காணாமற்போனோர் பற்றிய அலுவலகமும் ஒரு அலுவலகம் மாத்திரம்தானா?என்ற கேள்வி எழுவது நியாயாமாகும் என்றும் எனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

Related posts:


துறைமுகம் அமைக்கப்பட்டால் மக்களின் வாழ்வியல் பறிபோகும் - டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் சுட்...
தமிழ் பேசும் தரப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருந்தால் இலங்கைத்தீவு இரத்த தீவாக மாறியிருக்காது ...
வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...