ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Thursday, August 4th, 2022

ஒலுவில் துறைமுகத்தினை நவீன வசதிகளை கொண்ட மீன்பிடித் துறைமுகமாக உருவாக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புனரமைப்பு பணிகள் தொடர்பான ஆய்வு ரீதியான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், துறைசார் அதிகாரிகள் உட்பட சம்மந்தப்பட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்த நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்து கொண்டு அம்பாறை மாவட்ட மக்களின் அபிப்பிராயங்களையும் எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  –

இதன்போது ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், துறைசார் அதிகாரிகள் உட்பட சம்மந்தப்பட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்த நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்து கொண்டு அம்பாறை மாவட்ட மக்களின் அபிப்பிராயங்களையும் எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனிடையே நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள சுமார் ஏழு மீன்பிடித்  துறைமுகங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினை கடந்த வாரம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த துறைமுகங்களில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். –

நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள கிரிந்த, ஹம்பாந்தோட்டை, தொடந்துவ, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, பேரலிய,  பானந்துறை ஆகிய  மீன்பிடித்  துறைமுகங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினை கடந்த வாரம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த துறைமுகங்களில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: