நிரந்தர பொருளாதாரத்தை ஈட்டும் வழிவகைகளை செய்து தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் பூநகரி மக்கள் கோரிக்கை!

Tuesday, January 22nd, 2019

கொடிய யுத்தத்திலிருந்து மீண்ட எமக்கு வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு நிரந்தர பொருளாதாரம் இன்மையே பாரிய சவாலாக இருந்துவருகின்றது. இன்றைய நிலையில் எமக்கு தேவையானது நிரந்தர பொருளாதாரமே. அதை உங்களால் மட்டுமே எமக்கு உருவாக்கித்தர முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. அலுவலகம் திறந்துவைக்கப்பட்டபின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிந்துகொண்டார். இதன்போதே குறித்த மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள்  தெரிவிக்கையில் –

யுத்தத்திலிருந்து மீண்ட இன்றுவரையான காலப்பகுதியில் எம்மிடம் பலர் வந்து பலதரப்பட்ட உறுதிமொழிகளை தந்து சென்றுள்ளனர். ஆனால் அந்த உறுதிமொழிகள் அனைத்தும் இதுவரை எம்மிடம் வந்துசேரவில்லை.

எமக்கு கடந்த காலங்களில் பல வகைகளிலும் உதவிகளை செய்து துயரங்களிலிருந்து ஓரளவெனும் விடுபடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பங்காற்றியிருந்ததை நாம் மறந்தவிடவில்லை. ஆனாலும் எம்மிடம் இன்னும் பல தேவைப்பாடுகள் இருக்கின்றன.

எமது வாழ்வில் நிரந்தர பொருளாதாரத்துக்கான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றது. இதனால் நாம் பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றோம்.

இக்கிராமத்தில் 38 இளம் குடும்பங்கள் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட நிலையில் காணப்படுகின்றனர். அவர்கள் தமது பிள்ளைகளை வளர்ப்பதற்காக பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.

கடந்த காலங்களில் நாம் நன்றி மறந்தவர்களாகவும் செயற்பட்டுவிட்டோம். அதன் பலாபலன்களையே இன்று அனுபவித்த வருகின்றோம். எமக்கு வாழ்வாதார உதவிகள் வேண்டாம். நிரந்தர பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ளும் வழிவகையை பெற்றுத்தாருங்கள். அதற்கான பெறிமுறையை உருவாக்கி எமது அவல நிலையை இல்லாது செய்யுங்கள். எமது மக்களின் அவலங்கை போக்க  டக்ளஸ் தேவானந்தா என்ற உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும் என அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

மக்களது பாரச் சுமைகளை கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  கடந்த காலத்தில் எம்மிடம் மக்கள் பலம் குறைவாக இருந்தாலும் மக்கள் நலனை முன்னிறுத்தி நாம் ஆட்சியில் பங்கெடுத்த காரணத்தால் எமது மக்களுக்கு உச்சபட்சமான பல்வேறுபட்ட தேவைப்பாடுகளை உடனடியாக செய்துகொடுக்க முடிந்தது.

ஆனால் இன்று எம்மிடம் அவ்வாறான நிலை காணப்படவில்லை. மக்களாகிய உங்களது துன்ப துயரங்கள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டுமானால் உங்கள் ஒவ்வொருவரிடமும் அரசியல் தெளிவு ஏற்படவேண்டும்.

அவ்வாறு நீங்கள் தெளிவுற்று தமிழ் மக்களின் அரசியல் பலத்தை எம்மிடம் தருவீர்களானால் வெகு விரைவில் உங்கள் ஒவ்வொருவரது பிரச்சினைகள் மட்டுமல்ல எமது மக்களது உரிமைசார் பிரச்சினைகளையும் வென்றெடுத்து தர நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

IMG_20190122_102924

IMG_20190122_102619

IMG_20190122_101344

IMG_20190122_101031

IMG_20190122_100311

IMG_20190122_104747

Related posts: