உங்கள் பாட்டனார் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் – அமைச்சர் டக்ளஸ் கஜேந்திரகுமாருக்கு அழைப்பு!

Saturday, February 17th, 2024

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்கள் அதை தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

தான் இது தொடர்பில் பலமுறை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை முன் வைத்திருக்கிறேன். தமிழ்நாடு சென்று தமிழக தலைவர்களுடன் மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் பேசுவோம் எனவும் அழைப்பு விடுத்தேன் சிலர் அதனை மறுக்கின்றனர் என்றார்.

இதன் போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் நீங்கள் துறைசார்ந்த அமைச்சராக இருக்கிறீர்கள் உங்களால் பிரச்சினை தீர்க்க முடியாது என்றால் எங்களை ஏன் அழைக்கிறார்கள் என்றார்.

இதன் போது பதில் அளித்த அமைச்சர் இந்த பிரச்சனை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. இந்தப் பிரச்சினையை ஒருவர் கையாள முடியாது இராஜதந்திர ரீதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கையாள வேண்டும் என்றார்.

இதன்போது பதிலளித்த கஜேந்திரகுமார் உங்களால் கையாள முடியாது என்றால் ஏன் அமைச்சராக இருக்கிறீர்கள் பதவியை துறவுங்கள் என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நான் பதவி விலகுவதால் குறித்த பிரச்சனை தீரப் போவதகத் எனக்கு தெரியவில்லை. உங்கள் பாட்டனர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால்  பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என நினைக்கிறேன் என சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனிடையே

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கி தருமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்ட முன்மொழிவுகள் உள்ளடக்கிய கோரிக்கையை அனுப்பியுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்ததாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்த்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் வருடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில்  யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் உள்ள ஆறு  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் திட்டங்களை எவ்வாறு தயாரித்து நிறைவு செய்தீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவிததுள்ளார்.

இதன் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை பார்த்து நீங்கள் ஜனாதிபதியிடம் அபிவிருத்தி நிதி கேட்கவில்லையா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நான் ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பவில்லை யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு திட்டங்கள் தொடர்பாகக் கடிதம் அனுப்பினேன் அவர் அனுப்பி விட்டதாக எனக்கு தெரியப்படுத்தினார்  என்றார்.

இந்நிலையில் அமைச்சர் மேலும் கூறுகையில் –

சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டு தெரிவுகள் திரட்டப்பட்டுள்ளது.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச அபிவிருத்திக் கலந்துரையாடலில் தமது பிரதிநிதிகளை அனுப்பிவிட்டு தற்போது திட்டங்கள் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடவில்லை என கூற முடியாது.

மேலும் கடந்த மூன்று வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாத நிலை இருந்த போதும் இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண மாவட்டத்திற்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். ஆனாலும் இந்த நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது..

அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே உள்ளது. அதற்கிணங்கவே இம்முறை பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அப்பிரதேச மக்களின் நேரடி தெரிவுகளாக திட்டங்களும் முன்மொழிவுகளும் திரட்டப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்புகளை பேணி வருபவர்கள் அவர்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் அபிவிருத்திக்காக நிதி கேட்டுள்ளார்கள் அவர்களின் தனிப்பட்ட ஒதுக்கீட்டில் நான் தலையிடப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: