இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் வருகின்றது திருத்தம் – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Friday, October 1st, 2021

சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா,  கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.

தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இலங்கை கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுப்பதையும் இலங்கை கடற்றொழில் செயற்பாடுகளை வினைத் திறனுடன் மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில், குறித்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது  - வவுனியாவில் டக்ளஸ் தேவா...
தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்....
மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ள...