வெள்ளவத்தை சைவ மங்கையருக்கு விளையாட்டு மைதானம் அமைச்சர் தேவானந்தா உறுதி!

Thursday, December 10th, 2020

வெள்ளவத்தை சைவ மங்ககையர் வித்தியாலயத்தின் நீண்ட கால எதிர்பார்ப்பாக காணப்படுகின்ற மைதானம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்கள் அமைத்தையும் வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழுகின்ற குறித்த பாடசாலையின் 90 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் பாடசாலை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொவிட்- 19 தொடர்பான சுகாதார விதிமுறைகளையும் சமூக இடைவெளியையும் பேணி நடைபெற்ற குறித்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தலைநகரில் தமிழ் மாணவிகளை ஆளுமையாளர்களாக உருவாக்கி வருகின்ற சைவ மங்கையர் வித்தியாலயத்தின் வளர்ச்சியும் அண்மைக் காலப் பரீட்சைப் பெறுபேறுகளும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாகவும், அதற்கான பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் ஆசியர்களுக்கும், மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சுமார் 90 வருடங்களுக்கு முன்னர் மூன்று பெண்மணிகளின் தற்துணிவு மிக்க முயற்சியினால் உருவாக்கப்பட்ட பாடசாலை தற்போது 1ஏபி பாடசாலையாக பல்வேறு கட்டமைப்புக்களை கொண்ட வியாபித்திருப்பது வியக்க வைப்பதாகவும் தெரிவித்ததுடன், அமைச்சர் என்ற வகையில் தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பும், உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஊடகவ...
மாகாணசபை முறைமை உரிமை போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட...
உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை ஏழை மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் - ...