அடைய முடியாத இலக்கு நோக்கி மக்களை நான் வழிநடத்தியதில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 17th, 2020

அடைய முடியாத இலக்கு நோக்கி எமது மக்களை  நான் ஒருபோதும் வழிநடத்தியதில்லை என்பதுடன் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் எமது  மக்களுக்கு ஒருபோதும் வழங்கியதும் இல்லை என அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் அமைச்சரை சந்திக்க வந்திருந்த பலதரப்பட்ட பொது அமைப்புகள் மற்றும் மக்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவும், அதற்கு பின்னரான சூழலில் நாடாளுமன்றத்தில் எமது அரசியல் பலத்தின் ஊடாகவும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும் வாழ்வியல் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் உண்மையாகவே உழைத்து வருகின்றோம். அதுவே இன்று நியமாகியும் உள்ளது.

அதுமட்டுமல்லாது எல்லாக் காலத்திலும் நான் மக்களோடு வாழ்ந்து வருகின்றேன். அதனுடாக எமது மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் தெளிவாக அறிந்துகொண்டவன் நான்..

எனது ஆயுத வழிப்போராட்டத்தின் ஊடாகவும், தேசிய அரசியல் நீரோட்ட வழிமுறை ஊடாகவும் கிடைத்த அனுபவங்களில் இருந்தே, எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையூடாக நம்பிக்கையோடு தீர்வு காண முயற்சித்து வருகின்றேன்.  அத்துடன் எமக்கு கிடைத்த அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு தீர்வுகளையும் கண்டும் கொடுத்திருக்கின்றேன். 

இருந்தும், போதிய அரசியல் பலம் எம்மிடம் இல்லாததால் இன்னும் தீர்க்கவேண்டிய எமது மக்களின் பிரச்சினைகள் ஏராளம் எஞ்சியிருக்கின்றன. அத்துடன், நிலையான அரசியல் தீர்வும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை.

அந்தவகையில் எமது மக்கள் எந்தளவிற்கு என்னைப் பலப்படுத்தி, நான் முன்னெடுக்கும் வழிமுறையை பின்பற்றுகின்றார்களோ அந்தளவிற்கு பிரச்சினைகளை தீர்த்து, உரிமைகளைப் பெற்று, கௌரவமான, சமத்துவமான வாழ்வை நோக்கி நாம் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தெரிவித்த அமைச்சர் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்தி எமது கரங்களுக்கு அரசியல் பலத்தை தருவார்களானால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முடியுமான அளவில் தீர்வகண்டுகொணடுக்க எம்மால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நெல் காயவைக்கப் படுகிறது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
மக்கள் அரசியல் பலத்தை எமக்கு வழங்கியிருந்தால் அவர்கள் எதிர்நோக்கிவரும் கணிசமான பிரச்சினைகளுக்கு தீர...
தமிழ் மக்கள் முன்னால் 3 அரசியல் உள்ளது - தரகு அரசியல், சவப்பெட்டி அரசியல், நடைமுறைச்சாத்தியமான அரசிய...

பழைய சட்டங்கள் திருத்தப்படும் - காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்கள...
இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்தித்து கலந்த...
நிரந்தர நியமனங்களை விரைவுபடுத்தித் தருமாறு சுகாதாரத் தொண்டர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரி...