புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி மீன்பிடி இறங்குதுறை விரைவில் புனரமைக்கபடும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, December 19th, 2020

புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி கடற்றொழிலாளர்களது தேவைகருதி குறித்த பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு துறைமுகத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளர்.

இது தொடர்பில் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிலமைகளை பார்வையிட்டதுடன் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது குறித்த பகுதி இறங்குதுறை ஆழமாக்கப்பட வேண்டும் என்றும் சுமார் 300 மீற்றர் நீளமும் 50 மீற்றர் அகலமும் கொண்ட அணை கட்டப்பட வேண்டும் என்றும் அப்பகுதி கடற்றொழிலாளர்களால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அமைச்சர் குறித்த இறங்குதுறையை புனரமைப்பதற்கான நடவடிக்க விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

‘சேனா’ புழுவிற்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
நீர் வேளாண்மை ஊடாக மன்னார் மாவட்டத்தை கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மாற்றியமைப்போம் - ஓலைத்தொடு...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் E.P.D.P.யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பி...
வடக்கின் சுகாதாரத்துறை முன்னேற்றம் குன்றியநிலையில் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட...
படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...