பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்தார் ஜனாதிபதி ரணில் – அமைச்சர் டக்ளஸின் பிரசன்னத்துடன் இளைஞர்களுடன் கலந்துரையாடல்!

Friday, May 24th, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்ற முற்பகல் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார்.

வடக்கிற்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  இன்று முற்பகல் கொழும்பிலிருந்து விமானத்தில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து உலங்குவானூர்தி மூலம் யாழ் மத்தியகல்லூரி மைதானத்திற்கு வந்தடைந்த ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பளித்திருந்தார். 

3 நாள்கள் விஜயமாக வடக்கிற்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

இதனடிப்படையில் முதலாவது நிகழ்வாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது

வடக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பினையேற்று இரண்டு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதியினால் இக்கட்டித் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத் தொகுதியில் இரண்டு பெரிய நவீன சத்திரசிகிச்சை தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உட்பட பல நவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத் தொகுதி அமைக்கப்படுவதற்கு மாத்திரமன்றி, யாழ் பல்கலைக் கழகத்தின் விஸ்தரிப்பு மற்றும் வினைத்திறனான செயற்பாடு போன்றவற்றிற்கு ஒத்ததுழைப்பினை தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய வைபவத்தின்போது, யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களையும் உள்வாங்கி 1286 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (24) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கி “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் 13,858 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன

ஜனாதிபதியின் மற்றொரு நிகழ்வாக யாழ் மாவட்டடத்தை சேர்ந்த இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் ...
பலாலி - தமிழக விமான சேயையை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மன்னார் தி...